Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஐ.டி.ஐ.,களில்  மாணவர்கள் சேர்க்கை ஜூன் 13 வரை  விண்ணப்பிக்கலாம்

ஐ.டி.ஐ.,களில்  மாணவர்கள் சேர்க்கை ஜூன் 13 வரை  விண்ணப்பிக்கலாம்

ஐ.டி.ஐ.,களில்  மாணவர்கள் சேர்க்கை ஜூன் 13 வரை  விண்ணப்பிக்கலாம்

ஐ.டி.ஐ.,களில்  மாணவர்கள் சேர்க்கை ஜூன் 13 வரை  விண்ணப்பிக்கலாம்

ADDED : மே 23, 2025 11:37 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,க்களில் 2025--2026ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 19ல் துவங்கி ஜூன் 13 வரை ஆன் -லைனில் நடக்கிறது.

பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. www.skilltraining.tn.gov.in என்ற இணைதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேணடும்.

மாணவர்கள் சேர்க்கைக்கான உதவி மையங்கள் மேற்கண்ட அரசு ஐ.டி.ஐ.,க்களில் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப கட்டணம் ரூ.50ஐ Debit Card/Credit Card உள்ளிட்டவை வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு விபரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளி யிடப்படும்.

அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 14 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை. மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 13க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு பரமக்குடி 04564--231 303, ராமநாதபுரம் 04567 - 290 212, முதுகுளத்துார் 04576 --222 114, கடலாடி 63836 54943, கமுதி 94868 88176 ஆகிய தொலைபேசி, அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் வாளை ஆனந்தம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us