ADDED : மே 23, 2025 11:37 PM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி கிராமத்தில் தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டது.
முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இங்கு மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் கொண்டுலாவி கிராமம் இருளில் மூழ்கியது.
இரவு நேரத்தில் வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிதாக தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டது.இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.