Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு சட்டக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்க மாணவர் கோரிக்கை படிக்கட்டில் தொங்கும் அவலம்

அரசு சட்டக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்க மாணவர் கோரிக்கை படிக்கட்டில் தொங்கும் அவலம்

அரசு சட்டக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்க மாணவர் கோரிக்கை படிக்கட்டில் தொங்கும் அவலம்

அரசு சட்டக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்க மாணவர் கோரிக்கை படிக்கட்டில் தொங்கும் அவலம்

ADDED : செப் 20, 2025 03:48 AM


Google News
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு சட்டக்கல்லுாரி இயங்கி வருகிறது.

கடந்த 2024 ஆக., முதல் புதிய கட்டடத்தில் இயங்கி வரும் சட்டக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் வசதி செய்ய வேண்டும் என கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில் 700 மாணவர்கள் சட்டம் படித்து வருகின்றனர். உரிய நேரத்தில் பஸ் இல்லாததால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களிலும், நடந்து வந்து செல்லும் நிலை உள்ளது. பஸ் வசதி குறைவால் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

நேற்று அரசு சட்டக் கல்லுாரிக்கு வரக்கூடிய அரசு டவுன் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:

காலையில் நான்கு முறையும், மாலையில் நான்கு முறையும் அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி நிர்வாகம் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக மேலாளருக்கு கூடுதல் பஸ் வேண்டி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசு டவுன் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பொருள் செலவில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லுாரிக்கு போக்குவரத்து அவசியத் தேவையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us