/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காரங்காட்டில் பலத்த காற்று; படகு போக்குவரத்து நிறுத்தம் காரங்காட்டில் பலத்த காற்று; படகு போக்குவரத்து நிறுத்தம்
காரங்காட்டில் பலத்த காற்று; படகு போக்குவரத்து நிறுத்தம்
காரங்காட்டில் பலத்த காற்று; படகு போக்குவரத்து நிறுத்தம்
காரங்காட்டில் பலத்த காற்று; படகு போக்குவரத்து நிறுத்தம்
ADDED : ஜூன் 17, 2025 12:24 AM
திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இங்கு மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. அதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், பலத்த காற்று வீசுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்நிலை நீடிக்கும் என்றனர்.