Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் நடராஜர் சன்னதி திருப்பணிகள்; நாகநாதர் சிலைகள் அகற்றம்

ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் நடராஜர் சன்னதி திருப்பணிகள்; நாகநாதர் சிலைகள் அகற்றம்

ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் நடராஜர் சன்னதி திருப்பணிகள்; நாகநாதர் சிலைகள் அகற்றம்

ரூ.69 லட்சத்தில் ராமேஸ்வரம் நடராஜர் சன்னதி திருப்பணிகள்; நாகநாதர் சிலைகள் அகற்றம்

ADDED : ஜூன் 17, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள நடராஜர் சன்னதி திருப்பணிகள் ரூ.69 லட்சத்தில் துவக்கப்பட உள்ளன. இங்குள்ள நாகநாதர் சிலைகளை பாதுகாப்பாக அகற்ற தமிழ்நாடு வி.எச்.பி., யினர் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு 3ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சன்னதி பின்புறம் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தியானம் செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெளியில் பரிகார பூஜை செய்து நாகநாதர் சிலைகளை நடராஜர் சன்னதி பின்புறம் நிறுவி உள்ளனர். தற்போது 5000 சிலைகளுக்கும் மேல் உள்ளதால் சன்னதி சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டும், மேல்தள கற்கள் பலமிழந்தும் மழைநீர் கசிகிறது.

இதனை புதுப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஹிந்து அறநிலைத்துறை, தொல்லியல் துறை குழு பரிந்துரைத்தது. அதன்படி ரூ.69 லட்சத்தில் திருப்பணிகள் துவக்குவதற்காக நேற்று நாகநாதர் சிலைகளை அகற்றும் பணி நடந்தது.

இதுகுறித்து வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், இங்குள்ள நாகநாதர் சிலைகளை அகற்றும் போது பல சிலைகள் உடைந்துள்ளன. பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் ஹிந்து அறநிலைத்துறை செயல்படுகிறது. ஆகையால் சிலைகளை பத்திரமாக அகற்றி பாதுகாப்பான இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us