/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோரிக்கையை நிறைவேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி தகவல் கோரிக்கையை நிறைவேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி தகவல்
கோரிக்கையை நிறைவேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி தகவல்
கோரிக்கையை நிறைவேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி தகவல்
கோரிக்கையை நிறைவேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ., கட்சி தகவல்
ADDED : ஜூலை 02, 2025 07:35 AM
திருப்புல்லாணி : கடந்த பல மாதங்களாக திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: 2019ல் ரூ. 9 லட்சத்தில் 10 மீன் கடைகள் கட்டப்பட்டு எந்த பயன்பாடும் இன்றி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் மீன் கடைகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. பிள்ளையார் மற்றும் முருகன் கோயில் அருகே குப்பை கொட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டப் பணிகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் பைப் லைன்கள் காட்சி பொருளாகவே உள்ளது. திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மரத்தடி நிழலில் பாடம் படிக்கும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளியில் தாராளமாக இடமிருந்தும் அவ்விடத்தில் புதிய வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் விரைவில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.