/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.600 கோடி போதைப்பொருள் இலங்கை போலீசாரிடம் சிக்கியது ரூ.600 கோடி போதைப்பொருள் இலங்கை போலீசாரிடம் சிக்கியது
ரூ.600 கோடி போதைப்பொருள் இலங்கை போலீசாரிடம் சிக்கியது
ரூ.600 கோடி போதைப்பொருள் இலங்கை போலீசாரிடம் சிக்கியது
ரூ.600 கோடி போதைப்பொருள் இலங்கை போலீசாரிடம் சிக்கியது
ADDED : மே 29, 2025 12:42 AM
ராமநாதபுரம் : இலங்கை கடற்படையினர், புலனாய்வு போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து, இலங்கை தெற்கு கடல் பகுதி ஆழ்கடலில், இரு மீன்பிடி படகுகளை சோதனையிட்டனர்.
அதில், 600 கிலோ ஹெராயின், மெத் ஆம்பெட்டமைன் போன்ற உயர்ரக போதைப்பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, படகுகளில் இருந்த இலங்கையை சேர்ந்த 11 பேரையும் கைது செய்தனர்.
'போதைப்பொருட்களின் மதிப்பு இலங்கை பண மதிப்பில், 600 கோடி ரூபாய் இருக்கும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர கூறுகையில், ''போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை முப்படைகள், போலீஸ் உள்ளூர் மற்றும் வெளி நாட்டு புலனாய்வு அமைப்புகள், அனைத்து சட்ட அமலாக்க தரப்பினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.
துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தி செல்ல நடுக்கடலில் காத்திருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதாலும், ஏற்றிச் செல்ல படகு வராததாலும் அவற்றை கடலில் கொட்டிச் சென்றனர். அவை இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.