/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 217 இடங்களில் சிறப்பு முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 217 இடங்களில் சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 217 இடங்களில் சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 217 இடங்களில் சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 217 இடங்களில் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 02, 2025 07:52 AM
ராமநாதபுரம்; மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஜூலை 15 முதல் 30 வரை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 217 இடங்களில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது:
முதல்வர் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 30 வரை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் 217 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் தேதி, இடத்தை அப்பகுதிமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் பங்கேற்று மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாமில் மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.