ADDED : ஜூலை 02, 2025 07:53 AM
தொண்டி; புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மீன்பிடிக்க சென்ற தொண்டி மீனவர் மாரடைப்பால் இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான படகில் அதே மாவட்டம் பொன்னகரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 32, ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையை சேர்ந்த அந்தோணி 45, தொண்டி அருகே பாசிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி 55, ஆகியோர் மல்லிபட்டினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஐந்து நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முனியசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. படகில் மயங்கி விழுந்த அவர் இறந்தார். மல்லிபட்டினம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.