/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல் 40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
ADDED : மார் 22, 2025 05:45 AM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 40 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த தொடக்கப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, நடுநிலை பள்ளிகளுக்கு ைஹடெக் லேப் வசதி அறிவிப்பு வெளியானது. திருவாடானை வட்டாரத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இதில் முதல் கட்டமாக 40 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
முதல் கட்டமாக 40 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டு கட்டடம், 10 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மற்ற பள்ளிகளுக்கு வழங்கும் பணிகள் நடக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும் என்றனர்.