/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மகர் நோன்பு திடல் ரோட்டில் கழிவுநீர்: நோய் பரவும் அச்சம்மகர் நோன்பு திடல் ரோட்டில் கழிவுநீர்: நோய் பரவும் அச்சம்
மகர் நோன்பு திடல் ரோட்டில் கழிவுநீர்: நோய் பரவும் அச்சம்
மகர் நோன்பு திடல் ரோட்டில் கழிவுநீர்: நோய் பரவும் அச்சம்
மகர் நோன்பு திடல் ரோட்டில் கழிவுநீர்: நோய் பரவும் அச்சம்
ADDED : ஜன 08, 2024 05:47 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நகராட்சி 8வது வார்டு மகர்நோன்பு திடல் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர்வெளியேறி குளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் நோய்பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மகர்நோன்பு திடல் சாலையில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பாதாள சாக்கடை கழிவு நீர் நிறைந்துதெரு முழுவதும் குளம் போல் தேங்கியுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்திலும், வெளியே நடமாட முடியாத நிலையில் கழிவு நீர் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கியுள்ளது.
இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பகுதியில் காய்ச்சல் பரவி வருகிறது.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
பியூலா மல்லிகா: துர்நாற்றத்தால் யாரும் வெளியே வரமுடியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. நகராட்சிஅதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கைஇல்லை.
ஷபுராபானு: நானும், எனது மகனும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறோம். தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் குடிநீர் கூட குடிக்க முடியவில்லை. இப்பகுதியில் திருமணம் முடித்த புதுமணத் தம்பதிகள் தெருவுக்குள் வர முடியாமல் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் பல முறை புகார்
தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.----