/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: இன்று நடக்கிறது பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: இன்று நடக்கிறது
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: இன்று நடக்கிறது
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: இன்று நடக்கிறது
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: இன்று நடக்கிறது
ADDED : ஜன 05, 2024 05:25 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் உள்ள பள்ளிகளில் இன்று (ஜன.5) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடப்பதால் பெற்றோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என கல்வி அலுவலர்கள் கூறினர். வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (ஜன.5) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், 10, 11, 12 ல் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
மதியம் 3:00 முதல் 4:30 மணி வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
கூட்டம் முடிந்த பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் தலைமை ஆசிரியர், தலைவர் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.