வீட்டு வசதி திட்டத்தில் ஊழல்: மாஜி முதல்வர் ஜெகனுக்கு சிக்கல்
வீட்டு வசதி திட்டத்தில் ஊழல்: மாஜி முதல்வர் ஜெகனுக்கு சிக்கல்
வீட்டு வசதி திட்டத்தில் ஊழல்: மாஜி முதல்வர் ஜெகனுக்கு சிக்கல்
ADDED : ஜூலை 06, 2024 11:59 PM

ஐதராபாத்: ஆந்திராவில் புலிவெந்துலா வீட்டுவசதி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக விசாரணைகுழு அமைத்து தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். முந்தைய ஓய்.எஸ்.ஆர்., காங்.,கட்சி முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் புலிவெந்துலா வீட்டு வசதி திட்டத்தில் வீட்டு மனைகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை குழு அமைத்து அறிக்கை தர தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த தொகுதி புலி வெந்துலா என்பதால் அவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.