/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாதாள சாக்கடை குழாய் பதிக்க தீர்மானம் ரூ.10.43 கோடியில் பணிகள்பாதாள சாக்கடை குழாய் பதிக்க தீர்மானம் ரூ.10.43 கோடியில் பணிகள்
பாதாள சாக்கடை குழாய் பதிக்க தீர்மானம் ரூ.10.43 கோடியில் பணிகள்
பாதாள சாக்கடை குழாய் பதிக்க தீர்மானம் ரூ.10.43 கோடியில் பணிகள்
பாதாள சாக்கடை குழாய் பதிக்க தீர்மானம் ரூ.10.43 கோடியில் பணிகள்
ADDED : பிப் 24, 2024 05:52 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் 6.72 கி.மீ.,க்கு பாதாள சாக்கடை புதிய இரும்பு குழாய் பதிக்க ரூ.10 கோடியே 43 லட்சத்திற்கு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நகராட்சி அவசர கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் சிமென்ட் பம்பிங் குழாய்களில் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
இதனை சீரமைக்க ரூ.9 கோடியே 95 லட்சத்தில் 6.72 கி.மீ.,க்கு புதிய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இப்பணிக்கும், ஒப்பந்தப்புள்ளிக்கும், மதிப்பீட்டு தொகையை விட கூடுதலாக ஆகும் செலவுத்தொகை ரூ.48 லட்சத்து 9 ஆயிரம் பொது நிதியிலிருந்து மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வந்தனர். எந்த ஆட்சேபனையுமின்றி மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பாதாள சாக்கடை புதிய குழாய் பதிக்கும் பணிகள் ஒரிரு வாரத்தில் துவங்க உள்ளது. மேலும் ரூ.9 கோடியே 13 லட்சத்தில் ரோடு அமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.