/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விடுப்பு எடுத்து போராட்டம் அனைத்து பணிகள் பாதிக்கும் முதல்வர் தலையிட கோரிக்கை விடுப்பு எடுத்து போராட்டம் அனைத்து பணிகள் பாதிக்கும் முதல்வர் தலையிட கோரிக்கை
விடுப்பு எடுத்து போராட்டம் அனைத்து பணிகள் பாதிக்கும் முதல்வர் தலையிட கோரிக்கை
விடுப்பு எடுத்து போராட்டம் அனைத்து பணிகள் பாதிக்கும் முதல்வர் தலையிட கோரிக்கை
விடுப்பு எடுத்து போராட்டம் அனைத்து பணிகள் பாதிக்கும் முதல்வர் தலையிட கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 11:46 PM
ராமநாதபுரம்: ஜூன் 25ல் அனைத்து நிலை வருவாய் துறையினர் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதால் அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காணொளி மூலம் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 18) நடந்தது.
இதில் வருவாய்துறையில் காலி பணியிடங்களை நிரப்புதல், கருணை பணிநியமன உச்சவரம்பை 25 சதவீதமாக அதிகரித்தல்,ஜூலை 1ம் நாளை வருவாய்துறை தினமாக அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 25 ல் அனைவரும் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலமாக சென்று தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டத்தால் முக்கிய பிரமுகர்கள் வருகை பணி, பேரிடர் மேலாண்மை களப்பணி, மணல் கடத்தல் தடுப்பு பணி உள்ளிட்ட அனைத்து வருவாய்துறை பணிகளும் பாதிக்கப்படும்.
இதனை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு வருவாய்துறை அலுவலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.