/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தட்பவெப்ப நிலை மாற்றம் மீன்கள் வரத்து குறைந்தது தட்பவெப்ப நிலை மாற்றம் மீன்கள் வரத்து குறைந்தது
தட்பவெப்ப நிலை மாற்றம் மீன்கள் வரத்து குறைந்தது
தட்பவெப்ப நிலை மாற்றம் மீன்கள் வரத்து குறைந்தது
தட்பவெப்ப நிலை மாற்றம் மீன்கள் வரத்து குறைந்தது
ADDED : ஜூன் 19, 2025 11:45 PM
தொண்டி: தொண்டி பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சொறி மீன்கள் சிக்கியது. வழக்கமான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீன் இனபெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும்விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைகாலம் அறிவிக்கப்பட்டது.
காற்றின் வேகம் அதிகமானதால் மேலும் இரு நாட்கள் தடை நீட்டிக்கபட்டது. நேற்று முன்தினம் டோக்கன் வழங்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் சொறி மீன்கள் வலையில் சிக்கியதாலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தால்வழக்கமான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து தொண்டி மீனவர் சோனமுத்து கூறியதாவது:
தொண்டியில் மீன்பிடி தொழில் பிரதானமாக விளங்குகிறது. 65 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற போது சொறி மீன்கள் தான் அதிகமாக சிக்கியது. இவை ஜெல்லி மீன்கள் என்றழைக்கபடும்.
இவை உடலில் பட்டால்அரிப்பு, வலி, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த வகையான மீன்கள் வலையில் சிக்கியது. மேலும் சோழக கொண்டல் காற்று வீசாமல் கச்சான் காற்று வீசியது. இதனால் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் போதிய அளவு வழக்கமான மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது என்றார்.