/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தனுஷ்கோடியில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் படகுதனுஷ்கோடியில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் படகு
தனுஷ்கோடியில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் படகு
தனுஷ்கோடியில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் படகு
தனுஷ்கோடியில் ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவர் படகு
ADDED : ஜன 30, 2024 11:33 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்த விசைப்படகு காற்றின் வேகத்தில் திசைமாறி தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கியது.
ஜன.29ல் ராமேஸ்வரத்தில் இருந்து 118 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய கடல் பகுதியான தனுஷ்கோடி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அன்றிரவு வீசிய சூறாவளிக் காற்றில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணி மேக்சன் என்பவரது விசைப்படகு சிக்கி திசைமாறி சென்றது.
இதனால் இப்படகு தனுஷ்கோடி வடக்கில் கம்பிபாடு கடலோரத்தில் மணல் தீடையில் ஒதுங்கியது.
படகில் இருந்த 4 மீனவர்கள் படகை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் மீன்பிடித்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் 4 பேரையும் மீட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரையில் இறக்கி விட்டனர்.
கரை ஒதுங்கிய படகை மீட்க மீன்துறை அனுமதியுடன் மீட்புக் குழு மீனவர்கள் இரு படகில் இன்று (ஜன.31) தனுஷ்கோடி செல்கின்றனர்.