Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் ரோட்டில் திரியும் கால்நடைகளுக்கு..கடிவாளம் போடுங்க: விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியமுங்க

ராமநாதபுரம் ரோட்டில் திரியும் கால்நடைகளுக்கு..கடிவாளம் போடுங்க: விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியமுங்க

ராமநாதபுரம் ரோட்டில் திரியும் கால்நடைகளுக்கு..கடிவாளம் போடுங்க: விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியமுங்க

ராமநாதபுரம் ரோட்டில் திரியும் கால்நடைகளுக்கு..கடிவாளம் போடுங்க: விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியமுங்க

ADDED : செப் 07, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட புனித ஆன்மிக தலங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு வெளிமாவட்ட, மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக ராமேஸ்வரத்தற்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர். இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர், புறநகர் உட்புற சாலைகளில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டில் திரிகின்றன. வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்துவிடுகின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரம்- -- மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் பகல், இரவு என நேரம் காலமின்றி கால்நடைகள் உலா வருகின்றன. இவை நடுரோட்டில் வரும்போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றன. தெருநாய்களின் தொந்தரவைவிட தற்போது கால்நடைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

வாகனம் மோதி மாடுகள் பலி திருவாடானை, தொண்டி சுற்றுவட்டார கிராமங்களில் பசுமாடுகள் பால் கரக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அவிழ்த்து விடப்பட்டு சாலையில் திரிகின்றன. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நிறைய மாடுகள் படுத்து ஓய் வெடுக்கின்றன. நேற்று முன்தினம் இரவில் தொண்டி பெருமானேந்தல் கிராமம் அருகே ரோட்டில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று பசுமாடுகள் இறந்தன. போக்குவரத்து பாதிக்கபட்டது. பலியான மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

எனவே ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us