Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சந்திர கிரகணம் இன்று மதியம் நவபாஷாண கோயில் அடைப்பு

சந்திர கிரகணம் இன்று மதியம் நவபாஷாண கோயில் அடைப்பு

சந்திர கிரகணம் இன்று மதியம் நவபாஷாண கோயில் அடைப்பு

சந்திர கிரகணம் இன்று மதியம் நவபாஷாண கோயில் அடைப்பு

ADDED : செப் 07, 2025 02:53 AM


Google News
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடலில் நவபாஷாண நவக்கிரகம் கோயில் அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்வதற்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (செப்.7ல்) இரவு 9:56 முதல் அதிகாலை 1:52 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்வு நடக்கிறது. அதனால், இன்று மதியம் 1:30 மணி முதல் நவக்கிரக கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலை முதல் வழக்கம்போல் நவபாஷாண கோயில் தரிசனத்திற்கு திறக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இன்று மதியத்திற்குமேல் நவ பாஷாண நவரக்கிரக கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்நிலையில், நவபாஷாணத்திற்கு, மிலாடி நபி அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்தது. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுற்றுலா வாகனங்களில் வருகை தந்து நவக்கிரக வழிபாடு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us