ADDED : செப் 11, 2025 10:50 PM
ஆர்.எஸ்.மங்கலம்;ஆர்.எஸ்.மங்கலம் புலவர் அப்பா தர்கா 42 ம் ஆண்டு கந்துாரி விழா ஆக.,28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
நேற்று கந்துாரி விழா நெய் சோறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு ஏராளமான பொதுமக்களுக்கு நெய் சோறு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. செப்.,18 ல் நடைபெறும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தர்கா கந்துாரி குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.