/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ADDED : ஜூன் 12, 2025 11:10 PM

சிக்கல்; சிக்கல் அருகே கீழக்கிடாரம் ஊராட்சி காவாகுளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலுதலைமை வகித்தார். பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷ் கவுர் முன்னிலை வகித்தார்.
கடலாடி தாசில்தார் முருகேஷ் வரவேற்றார். காவாகுளத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு ரூ.23 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் புதிய ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, இறப்பு நிவாரணம், உழவர் பாதுகாப்பு திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன், துணை தாசில்தார்கள் முத்துராமலிங்கம், நாகராஜன், ரேணுகாதேவி, ஆர்.ஐ., சுரேந்திர மோகன், சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.