/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மூன்று ஆண்டுகளாக கிடப்பில் சி.சி.டி.வி., கேமரா: போலீசார் திணறல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் சி.சி.டி.வி., கேமரா: போலீசார் திணறல்
மூன்று ஆண்டுகளாக கிடப்பில் சி.சி.டி.வி., கேமரா: போலீசார் திணறல்
மூன்று ஆண்டுகளாக கிடப்பில் சி.சி.டி.வி., கேமரா: போலீசார் திணறல்
மூன்று ஆண்டுகளாக கிடப்பில் சி.சி.டி.வி., கேமரா: போலீசார் திணறல்
ADDED : ஜூன் 12, 2025 11:10 PM

ராமேஸ்வரம்; புனித தலமான ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும்ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள்மற்றும் கட்டட கட்டுமானத்தில் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், ம.பி., உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களில் சிலர் கற்பழிப்பு, கொலை, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு எஸ்கேப் ஆகி செல்லும் அபாயம் உள்ளது. மேலும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் போர்வையில் பலே திருடர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்குள் ஊடுருவி பக்தர்களிடம் நகை, உடைமைகளை திருடி செல்வது சகஜமாக உள்ளது.
இந்த குற்ற செயலை தடுக்க 2021ல் ராமேஸ்வரம் நகரின் ஹார்ட் தெருவான நான்கு சாலைகள் சந்திக்கும் திட்டக்குடியில் போலீசார் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி கண்காணித்தனர். இதன் மூலம் 2022 மே மாதம் இறால் பண்ணையில் வேலை செய்த வட மாநில இளைஞர்கள் வடகாடு மீனவ பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றபோது இந்த சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் போலீசார் துரிதமாக கைது செய்தனர்.
கேள்விக்குறி
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சி.சி.டி.வி., கேமரா துாண்களை மழைநீர் வாறுகால் அமைக்க நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அகற்றியது.இதனை அகற்றி 3 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் பொருத்த போலீசார் முன்வரவில்லை.
இதனால் சமூக விரோதிகள், திருட்டு கும்பலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். மேலும் குற்றவாளிகள் தொடர்ந்து அசம்பாவிதத்தில் அச்சமின்றி ஈடுபடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 2000 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதாக எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்த நிலையில் மாவட்டத்தின் முக்கிய நகரமான ராமேஸ்வரத்தில் சி.சி.டி.வி., கேமரா இல்லாததுபாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.