ADDED : ஜூன் 26, 2025 10:58 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பகுர்தீன், அயூப்கான், அமீன், பரக்கத் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.