/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்; மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம் மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்; மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்
மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்; மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்
மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்; மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்
மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்; மலட்டாறு பசும்பொன்னார் நகரில் ஆபத்தான பள்ளம்
ADDED : ஜூன் 26, 2025 10:58 PM

கடலாடி; கடலாடி அருகே பெரியகுளம் ஊராட்சி பசும்பொன்னார் நகரில் காவிரி குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
மலட்டாறு அருகே உள்ள பசும்பொன்னார் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள கிழக்குத் தெருவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட ஐந்து அடி ஆழமான பள்ளம் இதுவரை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
சாயல்குடி தன்னார்வலர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:
பெரியகுளம் ஊராட்சி பசும்பொன்னார் நகரில் உள்ள தெருவிற்கு செல்லும் சாலையில் நடுவே பெரிய பள்ளம் உள்ளதால் இரவு நேரத்தில் வெளிச்சமின்றி காணப்படுவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்டவைகளும் கீழே விழுவதால் அவற்றை அடிக்கடி மீட்டெடுக்கும் நிலையே உள்ளது. எனவே காவிரி குடிநீருக்காக வழங்கப்பட்ட பைப் லைன் இதுவரை தண்ணீர் சப்ளை இல்லை. ஆபத்து விளைவிக்கும் வகையில் விட்டு செல்லப்பட்ட பள்ளத்தை முறையாக பராமரித்து பணிகள் செய்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.