ADDED : ஜூன் 27, 2025 11:34 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேதாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 613 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை உள்ள 391 மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர்.
இவர்களுக்கு ராமநாதபுரம் சுங்கத்துறை சார்பில் துாய்மை இந்தியா செயல் திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் நுாறு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் பென்ஞ், டெஸ்க் செய்து துணை ஆணையர் பிரகாஷ் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.