/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விவசாயிகள் குமுறல்: ஆறு மாதங்களாகியும் மழை பாதிப்பு நிவாரணம் தரவில்லை: கண்மாய்களில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேலம் அகற்றவில்லை விவசாயிகள் குமுறல்: ஆறு மாதங்களாகியும் மழை பாதிப்பு நிவாரணம் தரவில்லை: கண்மாய்களில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேலம் அகற்றவில்லை
விவசாயிகள் குமுறல்: ஆறு மாதங்களாகியும் மழை பாதிப்பு நிவாரணம் தரவில்லை: கண்மாய்களில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேலம் அகற்றவில்லை
விவசாயிகள் குமுறல்: ஆறு மாதங்களாகியும் மழை பாதிப்பு நிவாரணம் தரவில்லை: கண்மாய்களில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேலம் அகற்றவில்லை
விவசாயிகள் குமுறல்: ஆறு மாதங்களாகியும் மழை பாதிப்பு நிவாரணம் தரவில்லை: கண்மாய்களில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேலம் அகற்றவில்லை
ADDED : ஜூன் 27, 2025 11:35 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 6 மாதங்களாகியும் நிவாரணத் தொகை வழங்கவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேல மரங்களை அகற்றவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) சரவணன், வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர், ராமநாதபுரம்: பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றனர். ஆனால் டிச., ஜன.,ல் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு 6 மாதங்களாகியும் நிவாரணம் வழங்கவில்லை. உடன் வழங்க வேண்டும். காற்று, மழைக்கு சாய்ந்துள்ள மின்கம்பங்களை உடன் சரி செய்ய வேண்டும். விவசாய மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அனுப்ப வேண்டும்.
கலெக்டர்: மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்குரிய நிவாரணம் விரைவில் வந்து விடும். மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னோடி விவசாயி பாலசுந்தரமூர்த்தி: பெரிய கண்மாய் மூலம் 2ம் போகம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக வைகை ஆற்றுநீர் திறக்க நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு நன்றி. இதே போன்று கடைமடை உரிமையை உறுதி செய்ய வேண்டும். பயிர்களை காட்டு மாடு சேதம் குறித்து புகார் தந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகவிஜயன், மாலங்குடி: உத்தரகோசமங்கை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு வாரச்சந்தை நடத்த வேண்டும். கண்மாய், ஊருணிகள், ரோட்டோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட வேண்டும். ரூ.2000 கோடி குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
கலெக்டர்: உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். குடிநீர் திட்டப்பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்து ஆக்கிரமிப்பு இருந்தால் உடன் அகற்ற வேண்டும் என பொதுப்பணித் துறை (நீர்வளம்) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதே போன்று நீர் நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். மழை மானிகள் போதிய அளவு அமைக்க வேண்டும். மான் மற்றும் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனையை தடுக்க வேண்டும். பருத்தி, மிளகாய் வாங்கும் வியாபாரிகள் 100க்கு 8 சதவீதம் கமிஷன் கேட்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், குறைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.