Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும்

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும்

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும்

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும்

ADDED : ஜூன் 30, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: -''கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்'' என தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது.

நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:

மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். நம் மதத்தையும், கிராம கோயில் பூஜாரிகளையும் இழிவுபடுத்த ஒரு கும்பல் அலைகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுதான் நீங்கள்நம் நாட்டிற்கு செய்ய தர்மம் என்றார்.

வி.எச்.பி., மாநில இணை பொதுச் செயலாளர் ராமசுப்பு, மதுரை நாடார் மகாஜனசங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் பேசினர்.

கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி, ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us