/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொண்டி திரும்பிய 2 மீனவர்கள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி தொண்டி திரும்பிய 2 மீனவர்கள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி
தொண்டி திரும்பிய 2 மீனவர்கள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி
தொண்டி திரும்பிய 2 மீனவர்கள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி
தொண்டி திரும்பிய 2 மீனவர்கள்: குடும்பத்தினர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2025 02:44 AM
திருவாடானை: தொண்டி கார்த்திகேயன்40, நம்புதாளை குப்பாண்டி 30, ஆகிய மீனவர்கள் ஓராண்டுக்கு முன் விசா மூலம் ஈரானுக்கு மீன்பிடி தொழிலாளர்களாக சென்றனர். அங்கு போர் மூண்டதால் அப்பாவி மக்கள் பலியானதால் மீனவர்களின் உறவினர்கள் பதட்டமடைந்தனர். அலைபேசியில் தொடர்பும் கிடைக்க வில்லை.
ராமநாதபுரம் கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மீனவர்களை மீட்ககோரி மனு கொடுத்தனர். இந்திய துாதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுஜூன் 27ல் விமானம் மூலம் கார்த்திகேயன், குப்பாண்டி டில்லி வந்தனர். ரயிலில் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்தனர். தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ., குருநாதன், போலீசார் அழைத்து வந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.