Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் இறால் விலை வீழ்ச்சி ரூ.5.60 கோடி இழப்பு: மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில் இறால் விலை வீழ்ச்சி ரூ.5.60 கோடி இழப்பு: மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில் இறால் விலை வீழ்ச்சி ரூ.5.60 கோடி இழப்பு: மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில் இறால் விலை வீழ்ச்சி ரூ.5.60 கோடி இழப்பு: மீனவர்கள் வேதனை

ADDED : ஜூன் 24, 2024 01:58 AM


Google News
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வியாபாரிகள் இறால் மீனுக்கு விலையை குறைத்ததால் ரூ.5 கோடியே 60 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். ராமேஸ்வரம், மண்டபத்திலிருந்து அறுபது நாட்கள் தடைக்கு பின் ஜூன் 14ல் 1200 விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் 3 லட்சம் கிலோ இறால் மீன்கள் சிக்கின.

ஜூன் 22ல் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பியதில் 1.50 லட்சம் கிலோ இறால் சிக்கின. கிலோவுக்கு 40 எண்ணிக்கையில் இருந்த இறாலுக்கு வழக்கமாக கிலோ ரூ.450க்கு ஏற்றுமதி வியாபாரிகள் வாங்குவார்கள். ஆனால் ஜூன் 16 மற்றும் நேற்று வாங்கிய இறாலுக்கு கிலோ ரூ.320 மற்றும் ரூ.340க்கு வழங்கினர். இதனால் ரூ.5 கோடியே 60 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது: ரூ.பல லட்சம் கடன் வாங்கி படகை பராமரித்து மீன் பிடிக்க சென்றதில் இறால், நண்டு, கணவாய் மீனுக்கு கிலோவுக்கு ரூ.110 முதல் 130 வரை ஏற்றுமதி வியாபாரிகள் விலை குறைத்து உள்ளனர். அதிக வரத்தால் ஏராளமான மீன்கள் அழுகியும், இருப்பு வைக்க முடியாமலும் விலையை குறைக்க வேண்டிய சூழல் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us