ADDED : செப் 04, 2025 04:05 AM
சாயல்குடி: தமிழ்நாட்டை ஆண்ட பாளையக்காரர்களுள் ஒருவரான மன்னர் பூலித்தேவன் 1751ம் ஆண்டில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் இந்தியர்களில் ஒருவராக வும், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழக்கமிட்டவர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் சேவலை ஆண்ட மன்னர். சாயல்குடியில் நா.த.கட்சியின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நா.த.க., மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா தலைமை வகித்தார். மீனவர் பாசறை பொறுப்பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
கட்சி நிர்வாகிகள் கமுதி ஜெயசீலன், நகர் செயலா ளர் விமல் ராஜ், ராஜ பாண்டியன், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மன்னர் பூலித் தேவனின் உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவிக்கப்பட்டது.