ADDED : செப் 04, 2025 04:05 AM
திருவாடானை: திருவாடானை மேல ரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக., 26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக ஆக.,29ல் திருவிளக்கு பூஜையும், 31ல் இளைஞர் மன்றத்தினரால் வடமாடு மஞ்சு விரட்டும், நேற்று காலை பூக்குழி விழாவும் நடந்தது.
பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர் வலமாக சென்று தீ மிதித்தனர். அன்னதானம், இரவில் சுவாமி ஊர்வலம் அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், தீபாராதனை நடந்தது.