Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி -- சிக்கலுக்கு பஸ் இயக்க கோரிக்கை

பரமக்குடி -- சிக்கலுக்கு பஸ் இயக்க கோரிக்கை

பரமக்குடி -- சிக்கலுக்கு பஸ் இயக்க கோரிக்கை

பரமக்குடி -- சிக்கலுக்கு பஸ் இயக்க கோரிக்கை

ADDED : ஜூன் 27, 2025 11:31 PM


Google News
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மட்டியாரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தில் இருந்து பரமக்குடி, சிக்கல் செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் 8 கி.மீ. தேரிருவேலியில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து லுார்து மனுவேல் கூறியதாவது:

மட்டியாரேந்தல் கிராமத்தில் இருந்து பரமக்குடி சிக்கல் செல்ல பஸ் வசதி இல்லை. கிராம மக்களின் நலன்கருதி பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி, வளநாடு, மட்டியாரேந்தல், கடம்போடை வழியாக சிக்கலுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். இதன்மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us