/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம் ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
ADDED : மார் 25, 2025 05:29 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய ராமகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் பாலமுருகன் வரவேற்றார். அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ், மாநில செயல் தலைவர் மணிராஜ், பொதுச் செயலாளர் ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ. 5 லட்சம், ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து பணி ஓய்வு மாதத்தில் பெரும் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.