ADDED : மார் 25, 2025 05:28 AM
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மற்றும் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கன்வாடிக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
ஓ.என்.ஜி.சி.,யின் உயர் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். மனித வளப் பொது மேலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார்.
திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி, வாப்ஸ் தொண்டு நிறுவன தலைமைச் செயலாளர் அருள், முன்னாள் யூனியன் சேர்மன் புல்லாணி உட்பட ஏராளமான பொதுமக்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நுாறுக்கு மேற்பட்ட உயர் கோபுரம் மின்விளக்குகள், ஆர்.ஓ., பிளான்ட், மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தீக்காய தனி வார்டு மற்றும் ஓ.என்.ஜி.சி., யின் நேரடியாக மக்கள் பயன்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.