ADDED : ஜன 11, 2024 04:16 AM
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக நெல் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. சேலம், நாமக்கல் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ள அறுவடை இயந்திரங்கள் அறுவடைப் பணிகள் நடக்கிறது.
ஏற்கனவே சேற்றில் நெற்கதிர்கள் சாய்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை செய்ய முடியவில்லை என்றனர்.