/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு.. எதிர்ப்பு: விவசாய பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவுராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு.. எதிர்ப்பு: விவசாய பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு.. எதிர்ப்பு: விவசாய பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு.. எதிர்ப்பு: விவசாய பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு.. எதிர்ப்பு: விவசாய பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு
ADDED : பிப் 11, 2024 12:11 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு 26 மையங்களில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தில் கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு, வைப்பாறு இணைப்புத்திட்டதிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பாசன கால்வாய்கள் இடது, வலது பிரதான கால்வாய், களரி கால்வாய், கூத்தன் கால்வாய் ஆகிய கால்வாய்களை மராமத்து செய்து இரு கரைகளையும் சிமென்ட் கால்வாய்களாக அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களை துார் வாரப்பட்டு பொதுப்பணித்துறையுடன் இணைக்க வேண்டும். கூத்தன் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு செல்வனுார் கண்மாய் முதல் வைகை ஆறு வரை மராமத்து செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானையை மையப்படுத்தி அரசு பஸ் டிப்போ அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு எக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் நிரந்தர நெல் கொள்முதல் மையமும் சேமிப்பு கிடங்கும் அமைக்க வேண்டும். அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்டத்திற்கு 30 இயந்திரங்கள் அனுமதிக்க வேண்டும். நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட வேண்டும்.
விவசாயத்திற்கு இழப்பீடு வழங்குவது போல் காட்டுமாடுகளால் இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துராமு தெரிவித்துள்ளார்.