ADDED : மே 31, 2025 11:15 PM
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமை வகித்து திறந்து வைத்தார். திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். காங்., நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
தி.மு.க., காங்., நிர்வாகிகள், கிராம நாட்டார்கள், நகர் வளர்ச்சி அறக்கட்ளையினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். காங்., வட்டார தலைவர் கணேசன் நன்றி கூறினார். கோயில் மரபுவழி சிற்ப கட்டடக்கலையில் சிறப்பாக பணியாற்றிய அமல்பாண்டியனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.