Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எம்.ஆர்.பட்டினத்தில் கடல் பாசி உலர்களம் அமைக்கும் பணி தினமலர் செய்தி எதிரொலி

எம்.ஆர்.பட்டினத்தில் கடல் பாசி உலர்களம் அமைக்கும் பணி தினமலர் செய்தி எதிரொலி

எம்.ஆர்.பட்டினத்தில் கடல் பாசி உலர்களம் அமைக்கும் பணி தினமலர் செய்தி எதிரொலி

எம்.ஆர்.பட்டினத்தில் கடல் பாசி உலர்களம் அமைக்கும் பணி தினமலர் செய்தி எதிரொலி

ADDED : மே 31, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
தொண்டி: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் கடல் பாசிகளை உலர வைப்பதற்காக உலர்களம் அமைக்கும் பணி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நடந்தது.

தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் மீனவப் பெண்கள் செயற்கை முறையில் கடல் பாசி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்த பாசிகளை வெயிலில் காயவைத்து குறிப்பிட்ட நாட்களுக்கு பின் மூடையாக கட்டி வெளி மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர்.

இதனால் மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. கடல் பாசிகளை பதனிடுவதற்கு முன் அவற்றின் ஈரப்பதத்தை குறைப்பதற்காக உலர் களத்தில் உலர வைக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட பாசிகளை சேகரித்து பின்னர் பதனிடுவதற்கு உலர் களம் உதவுகிறது.

தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் உலர்களம் மற்றும் கடல்பாசிகளை பாதுகாக்கும் வகையில் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக ரோடு மற்றும் கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பணிகள் துவங்கின.

இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியான உடனே பணிகள் துவங்கியது. ரோடு அமைக்கப்பட்டது. கட்டடங்களில் பூச்சு பணிகள் நடந்தன. கூரை இன்னும் அமைக்கவில்லை. தற்போது அமைக்கப்பட்ட ரோட்டை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us