/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆக்கிரமிப்பால் தொண்டி மணிமுத்தாறு வரத்து கால்வாய் மாயம்! கழிவுநீரை தடுத்து, துார்வார வலியுறுத்தல்ஆக்கிரமிப்பால் தொண்டி மணிமுத்தாறு வரத்து கால்வாய் மாயம்! கழிவுநீரை தடுத்து, துார்வார வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பால் தொண்டி மணிமுத்தாறு வரத்து கால்வாய் மாயம்! கழிவுநீரை தடுத்து, துார்வார வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பால் தொண்டி மணிமுத்தாறு வரத்து கால்வாய் மாயம்! கழிவுநீரை தடுத்து, துார்வார வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பால் தொண்டி மணிமுத்தாறு வரத்து கால்வாய் மாயம்! கழிவுநீரை தடுத்து, துார்வார வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 12:00 AM

தொண்டி : தொண்டி, அதனை சுற்றியுள்ள பல்வேறு கண்மாய்கள் நீர் ஆதாரமாக உள்ள மணிமுத்தாறு கால்வாய்கள் பராமரிப்பின்றி புதர் அடர்ந்து கழிவுநீர் ஓடுகிறது. மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் துார்வாரி, துாய்மைப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.
தொண்டியின் மையப்பகுதியில் மணிமுத்தாறு செல்கிறது. தளிர்மருங்கூர் கண்மாய் நிரம்பி அங்கிருந்து வெளியேறும் மழை நீரும், கடம்பாகுடி, மாவூர், பழயணக்கோட்டை, முகிழ்த்தகம், சின்னத்தொண்டி. தேளூர் போன்ற பல்வேறு கண்மாய்களிலிருந்து வெளியேறும் நீரும் இந்த ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பரந்து விரிந்திருந்த இந்த ஆறு தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கி கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது. பலத்த மழை பெய்தால் ஆற்றோர வீடுகளில் மழை நீர் புகுந்து விடும்.
இது குறித்து சமூக ஆர்வலர் மாலிக் கூறுகையில்: மணிமுத்தாறு கால்வாய் புதர் மண்டி ஆக்கிரமித்துள்ளது. கடந்த மாதம் கோடை மழை வழக்கத்திற்கு மாறாக பெய்தது. அப்போது மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஆகவே பருவமழை துவங்கும் முன் ஆற்றை துார்வார வேண்டும் என்றார்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ராஜேந்திரன், உதவி பொறியாளர் முத்தமிழரசன், சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மணிமுத்தாறை துார்வாருவது சம்பந்தமாக ரூ.7 கோடியே 25 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுவிட்டது.நிதி ஒதுக்கீட்டிற்கு பின் துார்வாரப்படும் என்றனர்.
----