/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 29, 2024 12:21 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போதைக்காக இளைஞர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த ஹரிஹரசுதன் 20, சுசீந்திரன் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை மருந்துக்கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் வாங்கி இளைஞர்களிடையே விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சக்கரக்கோட்டையில் உள்ள தர்மமூனீஸ்வரர் கோயில் பின் பகுதியில் எஸ்.ஐ., சரவணன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்றிருந்த இருவரை சோதனையிட்ட போது டேப்பென்டோல் என்ற நீரிழிவு நோயாளிகளின் நரம்பு வலிக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 10 அட்டையும், சாராடோல் முடக்கு வாதம், வீக்கம், மூட்டுகளின் விறைப்புத்தன்மைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரை 10 அட்டைகள் இளைஞர்களுக்கு போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்து ராமநாதபுரம் யானைக்கல் வீதி ஹரிஹரசுதன் 20, லட்சுமிபுரம் சுசீந்திரன் 23, ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்தனர்.