/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு; மைதானத்தின் நடுவே செல்லும் மின்கம்பம் ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு; மைதானத்தின் நடுவே செல்லும் மின்கம்பம்
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு; மைதானத்தின் நடுவே செல்லும் மின்கம்பம்
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு; மைதானத்தின் நடுவே செல்லும் மின்கம்பம்
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு; மைதானத்தின் நடுவே செல்லும் மின்கம்பம்
ADDED : செப் 09, 2025 10:59 PM

கடலாடி; கடலாடி அருகே ஆப்பனுார் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி பராமரிப்பின்றி சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. 250க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பள்ளியின் ஜன்னல் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்கும் நிலையில் உள்ளது. ஆப்பனுாரைச் சேர்ந்த நா.த.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:
அரசு உயர்நிலைப் பள்ளியின் மைதானம் தன்னார்வலர்களின் முயற்சியால் மராமத்து பணிகள் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் விளையாடக்கூடிய மைதானத்தின் நடுப்பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்லும் இரண்டு மின்கம்பங்கள் இடையூறாக உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் போது அறுந்து விழுந்தால் விபத்து அபாயம் உள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளியின் மைதானம் மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைக்க பராமரிப்பு நிதி வழங்கி வருகின்றனர்.
அவற்றை முறையாக பயன்படுத்தாமல் வைத்திருப்பதே இது போன்ற பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. கடலாடி மின்வாரியத்தினர் மைதானத்தின் நடுவே செல்லக்கூடிய மின்கம்பங்களை அகற்றக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பள்ளி மாணவர்களின் நலனுக்காக காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
எனவே கடலாடி யூனியன் அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் இப்பள்ளியை பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.