/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாநில குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு மாநில குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு
மாநில குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு
மாநில குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு
மாநில குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்துார் மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 09, 2025 10:59 PM
முதுகுளத்துார்; முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். எடை பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
இதில் முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 வயது பிரிவில் சோணுமித்ரன், யுவதில்லை ராஜன், டேனியல் கண்ணன் முதலிடம், பிரதீப்சபரி இரண்டாம் இடம், 17 வயது பிரிவில் சிவபாரதி, செல்வகணேஷ், லத்திகா கரன் முதலிடம், கிருத்திக் வர்ஷன், கோவிந்த சிவா இரண்டாம் இடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற 6 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ஜஹாங்கீர், கல்வி குழு தலைவர் காஜாநஜீமுதீன், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டி னர்.