/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரயில் நிலையத்தில் பெயரளவிற்கு குடிநீர் சப்ளை; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்ரயில் நிலையத்தில் பெயரளவிற்கு குடிநீர் சப்ளை; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ரயில் நிலையத்தில் பெயரளவிற்கு குடிநீர் சப்ளை; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ரயில் நிலையத்தில் பெயரளவிற்கு குடிநீர் சப்ளை; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ரயில் நிலையத்தில் பெயரளவிற்கு குடிநீர் சப்ளை; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 11:04 PM

ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் மற்றும்மதுரையிலிருந்து பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.
இதுபோக வாராந்திர ரயில்களாக திருப்பதி, வாரணாசி, செகந்திரபாத்,ராஜஸ்தான், அஜ்மீர், அயோத்தி, பனாரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் மாவட்டத் தலைநகரமான ராமநாதபுரத்திற்கு ஏராளமான வியாபாரிகள், பயணிகள் வந்து செல்கின்றனர்.
குழாய்களில் குடிநீர் வரவில்லை. ஆர்.ஓ., பிளான்டில் குடிநீர் பெயரளவில் வருவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக கழிப்பறைகள், ரயில் வரும் நேரம் மட்டுமின்றி காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக கழிப்பறை, 24 மணி நேரமும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.