Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிடப்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி

கிடப்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி

கிடப்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி

கிடப்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி

ADDED : ஜூன் 12, 2025 11:01 PM


Google News
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனைக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகள் கிடப்பில் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கான ஓ.பி.,சீட்டு பதிவிடம், எக்ஸ்ரே, பரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மருத்துவமனையின் சேதமடைந்த கட்டடங்களை அகற்றி புதிய கட்டடம் கட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் 2023ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கின. கடந்த ஆண்டே பணிகள் நிறைவடைந்து கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டிய நிலையில் கட்டடப் பணிகள் தற்போது கிடப்பில் விடப்பட்டுள்ளது.

போதிய கட்டட வசதியின்றி மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டடப் பணிகள் முடிவடையாதது குறித்து வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தற்போது நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்துள்ள நிலையிலும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us