/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒன்றிய அலுவலகத்தில் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள் ஒன்றிய அலுவலகத்தில் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள்
ஒன்றிய அலுவலகத்தில் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள் காட்சிப் பொருளான குப்பை அள்ளும் புதிய பேட்டரி வண்டிகள்

ADDED : செப் 22, 2025 03:22 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் வளாகத்தில் மூன்று ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்குரிய குப்பை அள்ள பயன் படுத்தப்படும் புதிய பேட்டரி வண்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் குப்பை அள்ள பயன்படுத்தும் வகையில் ரூ. பல லட்சம் செலவில் 60க்கு மேற்பட்ட பேட்டரி வண்டிகள் கடந்த மாதம் வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு மட்டும் பதிவெண் பெறப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மீதியுள்ள வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.இவை கன மழை, அதிக வெயிலில் பழுதாகிவிட வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் பதிவெண் பெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.