/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரையை தேடி ஊருணிகள் குளத்தில் குவியும் பறவைகள் இரையை தேடி ஊருணிகள் குளத்தில் குவியும் பறவைகள்
இரையை தேடி ஊருணிகள் குளத்தில் குவியும் பறவைகள்
இரையை தேடி ஊருணிகள் குளத்தில் குவியும் பறவைகள்
இரையை தேடி ஊருணிகள் குளத்தில் குவியும் பறவைகள்
ADDED : செப் 22, 2025 03:24 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போதிய மழை இல்லதாதால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்துள்ளது. தற்போதுள்ள பறவைகள் இரைக்காக ஊருணி, குளங்கள், ஓடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பிறகு இடம் பெயர்கின்றன.
அடுத்த மாதம் சீசன் துவங்க உள்ள நிலையில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களில் குறிப்பிடும் படியாக மழை பெய்யவில்லை.இதன் காரணமாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்துள்ளது. தற்போதுள்ள நீர் காகங்கள் உள்ளிட்ட பறவைகள் ராமநாதபுரம், காவனுார், புத்தேந்தல் ஆகிய இடங்களில் ஊருணிகள், குளங்கள், ஓடைகளில் தேங்கியுள்ள நீரில் இரையைத்தேடி குவிகின்றன.