/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையஉறுப்பினர் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையஉறுப்பினர் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையஉறுப்பினர் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையஉறுப்பினர் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையஉறுப்பினர் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு
ADDED : செப் 18, 2025 06:35 AM
ராமநாதபுரம் : தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் புவன் பூஷன் கமல் ராமநாதபுரம் சேதுபதி நகரில் செயல்பட்டு வரும் சமூக நீதி கல்லுாரி மாணவர், மாணவியர்விடுதிகளைஆய்வு செய்து அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் புவன் பூஷன் கமல் முன்னிலை வகித்து மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மாணவர்கள் விடுதிகள் தொடர்பாகவும், வழங்கப்படும் உணவு, விடுதியின் மாணவர்கள் சேர்க்கை உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் புவன் பூஷன் கமல் ராமநாதபுரம் சேதுபதி நகரில உள்ள சமூக நீதி கல்லுாரி மாணவர்கள் மற்றும் டி-பிளாக்கில் உள்ள மாணவியர்விடுதிகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆய்வுகூட்டத்தில் எஸ்.பி., சந்தீஷ், ஆர்.டிஓ., ஹபிபூர் ரகுமான், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜா, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதாராணி, மாவட்ட சமூக நல அலுலர் சுமதி பங்கேற்றனர்.