/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 05, 2024 05:20 AM

திருவாடானை, : திருவாடானை அருகே புதுப்பையூர் கிராமத்தில் நடுரோட்டில் உள்ள மின்கம்பம் நடைபாதைக்கு இடையூறாக உள்ளது.
திருவாடானை அருகே திருவெற்றியூர் ஊராட்சி புதுப்பையூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருவில் நடுரோட்டில் உள்ள மின்கம்பம், ஆபத்தான நிலையிலும், போக்குவரத்து இடையூறாகவும் உள்ளது.
புதுப்பபையூர் கண்ணன் கூறியதாவது: 2021ல் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலை அமைப்பதற்கு முன்பு நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தினோம். அதையும் மீறி சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இரவில் டூவீலர்களில் செல்பவர்கள் மோதி காயம் அடைகின்றனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் கட்டட பணிகளுக்கான அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே ஆபத்தான மின் கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் அமைக்க மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.