/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி மரக்குளத்தில் பால்குடம் ஊர்வலம் கமுதி மரக்குளத்தில் பால்குடம் ஊர்வலம்
கமுதி மரக்குளத்தில் பால்குடம் ஊர்வலம்
கமுதி மரக்குளத்தில் பால்குடம் ஊர்வலம்
கமுதி மரக்குளத்தில் பால்குடம் ஊர்வலம்
ADDED : ஜூன் 07, 2025 12:15 AM

கமுதி: கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் ஆதி விநாயகர், வில்லாலுடைய அய்யனார், கருமேனி அம்மன், காளியம்மன்கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன்துவங்கியது.தினமும் சிறப்பு பூஜை நடந்தது.
காளியம்மன் கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
'நேற்று விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் முக்கியவீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.பின் வில்லாலுடைய அய்யனாருக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை, விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.