ADDED : ஜூன் 07, 2025 12:15 AM

திருவாடானை: பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.